தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிதறிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாக்கப்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டுகளைக் கொண்டு வந்து போட்டது யார்? எப்படி வந்தது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.