புதுக்கோட்டையில் முதியோர் இல்லம் நடத்துவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க அலைக்கழித்ததால் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முதியோர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டனர்.
லட்சுமி என்பவர், மாத்தூரில் நடத்தி வரும் முதியோர் இல்லத்திற்கான உரிமத்தை புதுப்பிக்க, ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறையிடம் விண்ணப்பித்து 3 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, முதியோர் இல்லத்தில் இருந்த 25 பேரையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்த நிர்வாகிகள், அவர்களை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர்.
அப்போது, முதியோர் இல்ல நிர்வாகிகளின் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.