சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிவறை உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும், போலி நெய் விற்பனைக்குத் தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.