திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலநிலை அரங்கேறியுள்ளது.
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில் செஞ்சேரிமலை பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவமனையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் முதியவருக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததாலே இந்த அவலநிலை அரங்கேறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.