மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகாரப்போட்டி போல துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் தவாறானவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவன தலைவர்களின் மாநாடுகள் ஆண்டு தோறும் தமிழக ஆளுநரால் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகள் ஜனவரி மாதம் முதலே தொடங்கி அதற்கான கட்டமைப்புகள் தொடர்பாக நிபுணர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் எனவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது
, அந்த அறிக்கையில் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விப் பயிற்சியை சில ஊடகங்கள் அரசியல் திருப்பமாக மாற்றுகிறது எனவும் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றோடு இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவுவது போல சில ஊடகங்கள் காட்ட நினைப்பது தவறானது மற்றும் அவதூறான செயல் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது