ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கடற்படை அதிகாரி வினய் நர்வல் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியானா மாநிலம் கமல் நகரில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறவினர்கள் புடைசூழ வினய் நர்வலின் உடல், எடுத்துச் செல்லப்பட்டது.
முன்னதாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.