காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், ஜம்முவில் இருந்து பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.