திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களையும் மாணவிகள் எழுப்பினர். மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மாணவிகள்l உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.