பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடல் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அவரது உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த துயர சம்பவத்திலும் சிலர் மலிவான அரசியல் செய்வது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.