மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனால், பஞ்சாப்பில் உள்ள வாகா-அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். உரிய சோதனைக்கு பிறகு அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.