2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை ‘விஸ்டன்’ வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் ‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ என்று போற்றப்படும் ‘விஸ்டன்’ புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களைத் தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டுக் கவுரவிப்பது வழக்கமாகும்.
அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்தியப் பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.