அதிவேகமாக ஐந்தாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 51 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை அடைந்த 8-வது வீரர் ஆவார். அதே சமயம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.