மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளரின் மகன், தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
குவாலியரை சேர்ந்த ஆஷிஷ் ரகுவன்ஷி, உதவி துணை ஆய்வாளர் நரேஷ் ரகுவன்ஷியின் மகனாவார். இவர் 2024 UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 202வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆஷிஷ், சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்ததாகத் தெரிவித்தார். கடினமாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் பலம் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.