பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக பாஜக சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக பாஜக சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த சம்பவம் இந்தியர்களுக்கு மிகுந்த மன வலியை அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.