கடலூரில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை போலீசார் சோதனை செய்தபோது நவீன் என்பவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நவீனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமானவரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.