பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்குமென கூறினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துக் கட்சித் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
பஹல்காமில் நடைபெற்ற படுபாதக செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது எனவும், இதுபோன்ற தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
தீவிரவாத செயலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைத்ததாகவும், மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர் கூறினார்.