நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா வாசிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
இதேப்போல், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பாஜக யுவ மோர்ச்சா சார்பில் பதாகைகளை ஏந்தி பேரணி சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதேப்போன்று உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் அமைதியாக ஊர்வலமாக சென்றனர்.