பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டிய உள்ளூர்வாசியான அடில் தோகர் என்பவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது.
அடில் தோகர் கடந்த 2018 ஆம் ஆண்டு அட்டாரி-வாகா நில எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்துள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றுவிட்டு ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளார்.
உள்ளூர்வாசி என்பதால் தாக்குதல் குறித்துத் திட்டமிடவும், மறைவிடத்தைக் கண்டுபிடிக்கவும், தப்பிக்கும் வழியைத் தேர்ந்தெடுக்கவும் அடில் தோகர் உதவியுள்ளார்.
பிற தீவிரவாதிகளுடன் சேர்த்து அடில் தோகரையும் பிடிக்கப் பாதுகாப்புப் படை முயற்சித்து வருகிறது.