பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கை ஜூன் மாதத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு உள்ளிட்ட நான்கு பேரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 9 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.