புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடையில் மின்விளக்கு வசதி உள்ளிட்டவை இல்லையெனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையறிந்து ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளர், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுமென உறுதியளித்தார்.