அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய இபிஎஸ், தயாநிதி மாறன் தனது தேர்தல் நிதியை முறையாகச் செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இதை எதிர்த்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார்.
தயாநிதி மாறன் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த நீதிமன்றம், தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.