பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளைச் சுதந்திரப் போராளிகள் எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பாகிஸ்தானில் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தாங்கள் தற்காப்புக்காகத் தயார் நிலையில் இருக்கிறோம் எனவும், இந்தியா மீண்டுமொருமுறை தங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது எனவும் கூறினார்.
மேலும், பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்குக் காண்பிக்கட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.