பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய அசாம் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.
அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினார்.
இதையடுத்து அமினுல் இஸ்லாம் எம்எல்ஏவை தேச துரோக குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.