பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலில் 27 அப்பாவி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், இதனை கண்டித்து. கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் செய்தியார்களிடம் பேசினார். அப்போது, காஷ்மீர் பஹல்காமிடில தீவிரவாதிகள் இந்துக்கள் மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலை நடத்தி உள்ளதாக குற்றம்சாட்டினார்.