ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், லஷ்கர்-இ-தொய்பா தளபதி உட்பட 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.