சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.