மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனுக்களை வழங்கினர்.
தொடர்ந்து, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும், அதனால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆதங்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கூறினர்.
இதனை அடுத்துப் பேசிய ஆட்சியர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்துடன் வந்து புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.