ஹார்வர்டு பல்கலைக்கழகம் தனது 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கான நிதியை வெகுவாக குறைத்ததையடுத்து பங்குகள் விற்கப்படவுள்ளன.
வெளிநாட்டு மாணவர்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் உடன்பட மறுத்ததையடுத்து டிரம்ப் நிர்வாகம் நிதிகளை நிறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதனால் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேறு எந்த பல்கலைக்கழகத்திடமும் இல்லாத வகையில் ஹார்வர்டு 53 பில்லியன் டாலர் நிதியுதவியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.