திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் மே 23-ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கொடிமரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இரு பந்தக்கால்களும் கோயிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பைரவர் சன்னிதி மற்றும் யாகசாலை அருகே ஊன்றப்பட்டு முகூர்த்தம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.