காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, போராளிகள் என்று குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க அரசு கடும் கட்டணம் தெரிவித்துள்ளது. மேற்கத்தியச் செய்தி ஊடகங்கள் அனைத்தும், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் போலிச் செய்திகளையும், விஷமக் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பயங்கரவாதத்தை மறுப்பது, பயங்கரவாதச் செயலை விடவும் மிகவும் மோசமானதாகும். ஒரு அட்டூழியத்தை மறுப்பது என்பது, அந்த அட்டூழியத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயத்தை மறுப்பதாகும்.
காஷ்மீரில், நிராயுத பாணியாக நின்ற சாதாரண இந்திய மக்கள், இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்துள்ளனர்.
இஸ்லாமிய கலிமா வசனங்களை ஓதச் சொல்லிய இஸ்லாமிய பயங்கரவாதிகள், கலிமா தெரியாது என்ற இந்துக்களைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கலிமா தெரியாமல், துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான மஞ்சு நாத்தின் மனைவி, கண்முன்னே தன் கணவரைக் கொன்ற பயங்கரவாதியிடம், தன்னையும், தன் மகனையும் கொல் என கெஞ்சிய போது, கொல்லமாட்டேன்- போய் மோடியிடம் சொல் என,பிரதமர் மோடி மீதும் வெறுப்பைக் கக்கி இருக்கிறான் பயங்கரவாதி. மேலும், ‘கலிமா’ ஓதிய பேராசிரியரான ஒரு இந்து பிராமணரைப் பயங்கர வாதிகள் கொல்லாமல் விட்டுள்ளனர்.
பெங்களூரூவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியரான லெப்டினன்ட் வினய் நர்வால்-ஹிமான்ஷி, தேனிலவுக்காகக் காஷ்மீர் சென்றிருந்தனர். இந்து என்பதால், பயங்கரவாதிகளால், கொல்லப்பட்ட தனது கணவரின் பிணம் அருகில் அமர்ந்திருக்கும் ஹிமான்ஷியின் புகைப்படம் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அழியாத அடையாளமாகும்.
மனசாட்சியுள்ள குதிரை ஒட்டியான அடில் ஹுசைன் ஷாவும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். ஒரே காரணம், இந்துக்களைக் காப்பாற்ற முயற்சி செய்தது தான். இதனால் என்ன தெரிகிறது என்றால், இந்துக்களைக் கொல்! காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களையும் சுடு. காப்பாற்ற வந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் கொல் ! பயங்கரவாதிகளின் நோக்கம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதல், இந்து எதிர்ப்பு வெறுப்பாலும், அடிப்படைவாத இஸ்லாமிய மத வெறியாலும் நடத்தப்பட்டுள்ளது என்பதை, உறவுகளைப் பயங்கரவாதத்துக்குப் பலி கொடுத்தவர்களின் வார்த்தைகளே நிரூபிக்கின்றன.
இந்த உண்மையை மறுப்பது என்பது தர்மத்தை மீறுவதாகும். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிழைத்தவர்களின் யதார்த்தத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். பயங்கரவாத தாக்குதலுக்குப் பலியானவர்களை இழிவுபடுத்துவதாகும்.
இவற்றை எல்லாம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தவறாமல் செய்யும் மேற்கத்தியச் செய்தி ஊடகங்கள் கூடுதலாக, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தாம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது போன்ற ஒரு போலியான வாதத்தையும் முன்வைத்துப் பரப்புகின்றன.
பகல்காமில் பலியானவர்கள், சுற்றுலாவுக்கு வந்த இந்துக்கள் என்று குறிப்பிடாமல், ஏதோ காஷ்மீரை ஆக்கிரமிக்க வந்த “settlers” என்று குறிப்பிட்டு, பயங்கரவாத தாக்குதலை நியாயப் படுத்தி உள்ளனர்.
இது போல, பயங்கரவாதிகள் என்று சொல்லாமல், “போராளிகள்” என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் மாநிலமான ஜம்மு காஷ்மீர் என்று சொல்லாமல், “இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்” என்று வேண்டுமென்றே எழுதப்படுகிறது. படுகொலை செய்யப்பட்ட இந்துக்களை மட்டும் “முஸ்லிம் அல்லாதவர்கள்” என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை மறைப்பதற்காக, மேற்கத்திய ஊடகங்கள் பயன்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள், கதை சூழ்ச்சிகள், ஏமாற்று வேலைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், 34 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர். இது ஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்.
இது தவிர, ஜம்மு காஷ்மீரில் பல அடிப்படை உள்கட்டமைப்புகளும், பல சுரங்கப்பாதைகளும் கட்டப் பட்டுள்ளன. உயர்கல்விக்காக AIIMS உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிதாக ஒரு கோல்ஃப் மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப் பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஜம்மு காஷ்மீரின் அசாதாரண சூழல் முடிவுக்கு வந்துள்ளது. தீவிரவாத அமைப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. உண்மை இப்படி இருக்க, பகல்காம் தாக்குதல் பற்றி, ‘ஒரு மாயை உடைக்கப்பட்டது” என்று நியூ யார்க் டைம்ஸ் எழுதியுள்ளது. இது, எடுத்த காரியத்தில் தோல்வி அடையாத பிரதமர் மோடியைத் தோற்றவராகச் சித்தரிக்கும் சிறுபிள்ளை தனமாகும்.
நியூ யார்க் டைம்ஸ்ஸின் தவற்றை தாங்களே சரி செய்து விடுகிறோம் என்றும் கூறியுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும் பயங்கரவாதம் என்றால் பயங்கரவாதம் தான் என்று தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதம் என்ற விஷயத்தில் மட்டும் நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்துக்களின் இன அழிப்பு நடந்த மாநிலமான காஷ்மீரில் இந்து ஆண்கள் மட்டுமே படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்வதுதான் நேர்மையானதாக இருக்கும். பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று கூறப்பட்டுவரும் நீண்டகால பொய், காஷ்மீரில், இந்து என்று அடையாளப் படுத்திய பிறகு, சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்பது உண்மையிலும் உண்மை.