கோவையில் நடைபெற்று வரும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் பூத் கமிட்டி கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கட்சியின் தலைவர் விஜய் கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.
பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதுடன் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த பவுன்சர்களும், போலீசாரும் திணறினர். இந்நிலையில், 2-ம் நாளான இன்று கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தும் விதமாக கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.