மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை பல்லார்டு பியர் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.