டெல்லியின் ரோஹினி செக்டார் 17-ல் உள்ள குடிசைப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து 18-க்கும் மேற்பட்ட வண்டிகளில் சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள், தீயணைப்பு வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தினர். மேலும், இந்த தீவிபத்தால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.