தமிழக அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலியாகச் சட்டசபையில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலினின் துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.
அப்போது அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலியாக, முதல் வரிசையிலிருந்து பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டிருந்தன.
புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை பொறுப்பேற்றதும் அமைச்சர்கள் இருக்கை வரிசையில் அவரது பெயர் இடம்பெறும்.
சட்டசபை நிறைவு நாள் கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அமரும் வரிசையில் மனோ தங்கராஜ் இடம்பெறுவார்.
செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் 3-வது வரிசையான முன்னாள் அமைச்சர்கள் இருக்கையில் அமர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.