உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!
Sep 22, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கட்டுமஸ்தான உடலைப் பெற யாருக்குத்தான் பிடிக்காது. முன்பு, ஓடி ஆடி உடலைச் சீராக வைத்திருந்தவர்கள், இன்றைய நவநாகரீக காலத்தில் தேடுவது உடற்பயிற்சிக் கூடங்களைத் தான். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தரப்பினர் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடினாலும், மற்றொரு தரப்பினர் சிக்ஸ் பேக், ஃபிட்டான கட்டுமஸ்தான உடல் தோற்றத்திற்காக உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடுகின்றனர்.

இதனால் உணவகங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகளைப்போன்று உடற்பயிற்சி நிலையங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியைச் சமாளித்து தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில உடற்பயிற்சி நிறுவனங்கள் குறுக்கு வழியைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கார் ஒன்றில் உரிய அனுமதி இன்றி கொண்டு வரப்பட்ட ஊக்க மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த ஊக்க மருந்துகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பனை செய்வதற்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

சமீபகாலமாக இந்த ஊக்க மருந்து பழக்கம் உடற்பயிற்சி கூடங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கின்றனர் உடற்பயிற்சியாளர்கள். இந்த மருந்துகளை பயன்படுத்தும்போது மூளை தடுமாற்றம் அடைந்து தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பயன்படுத்தப்படும் இதுபோன்ற ஊக்க மருந்துகளால், மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும் இதுபோன்ற மருந்துகளை மனித உடல்களில் செலுத்தினால் நாள்பட்ட நோய்கள் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்களில் இருந்து உடல்களைப் பாதுகாக்கவே உடற்பயிற்சி கூடங்களை நோக்கி வருவதாகக் கூறும் வாடிக்கையாளர்கள், உடற் பயிற்சிக்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பழக்க வழக்கம் இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடங்களில் பரவி வரும் இந்த ஊக்க மருந்து கலாச்சாரத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவை மாவட்டம்Is exercise a stimulant?: A request to protect the younger generationஉடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தாஉடற்பயிற்சி
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Next Post

சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!

Related News

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies