நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே கவனிக்க ஆளில்லாததால் விரக்தியில் இருந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் ராமு அம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் தன்னை கவனிக்க ஆளில்லாததால் மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.