ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழகத்தில் லாக்-அப் மரணங்கள், என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கும் முதலமைச்சருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அச்சத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து தான் நீக்க சொல்லவில்லை என தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியும், தானும் பேசியதை பதிவு செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.