நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் – பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்! பிரதமருக்கு மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளதாக தெரிவத்துள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கூட்டினால் மக்கள் பிரதிநிதிகளின் ஒற்றுமையையும், உறுதியையும் காட்ட முடியும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றாக இருப்பதை காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.