ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூட ஜம்மு – காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் படிப்படியாக சுற்றுலாப்பயணிகள் மீண்டும் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி ஜம்மு – காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தளங்களில் 48 சுற்றுலா தலங்களை மூடுவதற்கு ஜம்மு – காஷ்மீர் அரசு தற்காலிக உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த மூடல் அறிவிப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருக்கு எளிதாக இருக்கும் என தெரிவித்த அம்மாநில அரசு காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் அரசின் ஆலோசனைகளை பெற்ற பிறகே பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.