மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் நிலையில், சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. பல லட்சம் பக்தர்கள் கூடும் விழா என்பதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் சித்திரைத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், விழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது.
மீனாட்சியம்மன் சன்னதிக்கு முன்னாள் உள்ள தங்கக் கொடி மரம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்கொடி மரம் முன்பு எழுந்தருளினர்.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில் தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள்
கொடியினை ஏற்றி வைத்தனர். அப்போது, பக்தர்கள் கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது எனப் பக்தர்கள் தெரிவித்தனர்.