தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரித் தொடர்ந்த வழக்கை ஜூன் 4 ஆம் தேதிக்குச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனப் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் தவெக கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்ன விதிகளுக்கு முரணானது எனப் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி விடுமுறையில் இருப்பதாகக் கூறி விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.