திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில் காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு, ஆவணங்களில் இருந்து மட்டும் காலனியை நீக்கினால் போதுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
காலனி நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட அதே நாளில், திருவண்ணாமலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்,
வேங்கை வயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கொடூரம் அரங்கேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,
தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டைச் சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில், காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று எனவும் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.