ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அதன்படி குப்பை தொட்டிகள், கழிவறைகள், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்டவற்றில் மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். மேலும், திருப்பதிக்கு வந்தவர்களின் விவரங்களையும் சேகரித்து, சந்தேகத்திற்கிடமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.