ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி, முழு சுதந்திரம் வழங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள நவ்ஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளில் 6வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.