தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்குவதே தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவினரின் பணியாகும். தற்போது பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷியை தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. புதிதாக மாற்றியமைத்த குழுவில் 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள், 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், ஒரு IFS முன்னாள் அதிகாரிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பிற்கான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.