காமாட்சி அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றும் அஜித் மட்டுமல்ல தமிழகத்தில் 4 பேருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறந்தவர்கள், சேவகர்கள் உள்ளிட்டோரைக் கவுரவிப்பதில் பாஜக தயங்கியதில்லை என்றும் அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
திமுகவின் தேர்தல் பணிகளால் எந்த உபயோகமுமில்லை என்றும் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.