234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் காப்பீடு திட்டம் குறித்து மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் ஊர்தியை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் தொடங்கி வைததார்.
பின்னர் செயதியாளர்களிடம் பேசிய தமிழிசை, சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம், ஆணவத்தில் பேசுவதாக தெரிவித்தார். 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
ஒன்பது அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளதாகவும், இவர்கள் வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் எனறும் தெரிவித்தார் எங்கே மக்கள் பிரச்னைகளை கவனிக்க போகிறார்கள் என்றும் தமிழிசை கூறினார்