சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கரும், மகாத்மா காந்தியும் இல்லை என்றால் காங்கிரஸ் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்காது எனத் தெரிவித்தார்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நேரு கடுமையாக எதிர்த்ததாகக் கூறிய அவர், மண்டல் கமிஷன் அறிக்கையை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தது யார் எனக் கேள்வி எழுப்பினார்.
ராஜீவ் காந்தியும் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீண்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார் எனச் சுட்டிக்காட்டிய அவர், தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே நீதி வழங்கும் காங்கிரசிடம் இருந்து சமூக நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும் என வினவினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளதாக தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.