பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்பு கொண்டு பேசியதை சுட்டிக்காட்டினார் .
கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது போல், பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுடன் வலுவாக நிற்பதாகவும், மேலும் பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தெற்காசியாவில் நீண்டகால அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கும் ஒரு பொறுப்பான தீர்வை நோக்கி இரு நாடுகளும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இரு நாடுகளின் அரசாங்கங்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.