பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தலைநகரம் கொழும்புவில் போராட்டம் வெடித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே எமது தலைமுறை என்ற கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தூதரகம் ஆதரவு அளிக்கிறதா என்பது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.